Thursday, June 23, 2016

உடல் இயக்கமும் நோயும்

*நோய்*

*“நோய் என்று எதுவும் இல்லை”* என்கிறது இந்திய அக்குபங்சர், அப்படி என்றால் நோய் என்றால் என்ன?குழப்பமாக இருக்கிறதா? வாருங்கள் தெளிவடைவோம்.
உடல் தன்னுடைய சக்தி(ஆற்றல்) தேவையை நான்கு வழிகளில் பெற்று கொள்கிறது,

1.உணவு, 2.நீர், 3.காற்று, 4.பிரபஞ்சம் ஆகியவற்றின் மூலம். இதில் காற்றை மூக்கின் வழியாக நுரையீரல் சுவாசித்து தேவையான சக்தியை(ஆக்சிஜன்) எடுத்துக்கொண்டு எஞ்சிய கழிவு காற்றை வெளியிடுகிறது, பிரபஞ்ச சக்தி எனும் பஞ்சபூத சக்தியை தோலின் மேல் பகுதியில் அமைந்துள்ள புள்ளிகள்(நுண் துளைகள்) வழியாக உடல் உள்ளுறுப்புகள் சுவாசித்து சக்தி பெற்றுக்கொண்டு எஞ்சிய கழிவை வெளியேற்றுகின்றன. இவ்வாறு நமது கட்டுப்பாட்டில் இல்லாத இந்த இரண்டு தேவைகளும் தேவைப்படும்போது தேவையானஅளவு செவ்வனே நடைபெறுகின்றன.
நம்முடைய கட்டுப்பாட்டில் உள்ள உணவு,நீர் ஆகிய இரண்டு தேவைகளை பார்ப்போம்.

உணவை நாம் எப்போது உண்ண வேண்டும்? காலை9மணி, மதியம்2மணி, இரவு1௦மணி என்ற நேர கணக்கிலா?!அல்லது, நமக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாமா?!-நிச்சயமாக இல்லை,எப்போது உணவில் இருந்து கிடைக்ககூடிய சக்தி உடலுக்கு தேவைப்படுகிறதோ அப்போதுதான் உண்ண வேண்டும். உடலுக்கு சக்தி தேவை என்பதை நாம் எப்படி உணர்வது? உணவை செரித்து அதில்உள்ள சக்தியை பிரித்தெடுக்ககூடிய சுரப்புநீர்கள் இரைப்பையில் சுரக்கப்பட்டு பசி எனும் உணர்வு நமக்கு ஏற்படும்,அந்த பசி உணர்வுதான் உடலுக்கு சக்தி தேவை என்பதை உணர்த்தும். பசித்து உண்ணும் போதுதான் செரிமானம் முறையாக நடைபெறும், செரிமானத்தில் இருந்து கிடைக்கும் சக்தியை பெற்றுக் கொண்டு அதில் எஞ்சிய கழிவுகளை எளிதாக வெளியேற்றும் உடல்.

உடலில் நீர்சக்தி குறையும் போது,அதன் தேவை ஏற்படும்போது நா வறண்டு தாகம் எனும் உணர்வு நமக்கு ஏற்படும்,அப்போதுதான் நீர் அருந்த வேண்டும், தாகம் எடுத்து தண்ணீர் அருந்தும் போதுதான் தண்ணீரில் உள்ள சத்துகள் உறிஞ்சப்பட்டு எஞ்சிய கழிவுகள் எளிதாக வெளியேற்றப்படும். சரி! பசி,தாகம் கவனித்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கும், பசி,தாகம் கவனிக்காமல் சாப்பிட்டால் என்ன ஆகும்?

வள்ளுவர் சொல்கிறார்

*மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது*
*அற்றது போற்றி உணின்.*

மருந்து என்பது வேண்டாம் உடலுக்கு, உண்டது (உணவு,நீர்)
செரித்து, தேவையை (பசி,தாகம்) கவனித்து உண்போருக்கு.

அதாவது உடலின் உணர்வை கவனித்து நடப்போருக்கு நோய் வராது அதனால் மருந்து என்பது தேவைப்படாது.,

உடலில் பசி, தாகம் இல்லை என்றால் நாம் முன்பு உண்ட உணவின் சக்தியை உடல் இன்னும் பெறவில்லை அல்லது பெற்ற சக்தியை செலவிடவில்லை எனப் பொருள். பசி,தாகம் இல்லாத போது நாம் உட்கொள்ளும் எதையும் உடல் செரிப்பதில்லை, செரிக்காத உணவு கழிவாக உள்ளுறுப்புகளில் தேங்குகிறது. தேங்கிய கழிவு உள்ளுறுப்புகளை பாதிக்கும் என்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அந்த கழிவை வெளியேற்ற முயற்சிக்கிறது. உதாரணமாக உணவு குழாயின் முடிவில் உள்ள இரைப்பையில் தேங்கிய கழிவை உணவு குழாயில் எரிச்சலுடன் ஏப்பமாகவோ, வாந்தியாகவோ வெளியேற்றி உடலை பாதுகாக்கிறது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி. இதைப்போலவே நுரையீரலில் தங்கிய கழிவை வெளியேற்ற உடலின் நோய் எதிர்ப்பு சக்தி சளியை உருவாக்கி அதை இருமல், தும்மல் மூலம் வெளியேற்றுகிறது.

இவ்வாறு உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் முயற்சியைதான் நாம் நோய் என பெயரிட்டு அழைக்கிறோம். இதைத்தான் இந்திய அக்குபங்சரின் கழிவுநீக்க தத்துவம் சொல்கிறது “உடல் வெளியேற்றும் அனைத்தும் கழிவுதான்” எனவே “நோய் என்று எதுவும் இல்லை” என்று.

சரி,நோய் என்று எதுவும் இல்லை, ஆனால் உடலில் ஏற்படும் தொந்தரவுகள் மிகுந்த சிரமப்படுத்துகிறதே இதற்கு என்ன காரணம்? பஞ்சபூத தத்துவம் பதில் சொல்கிறது.

உடல் தன்னைத்தானே சரி செய்து கொள்ளும் முயற்சியாக உடலில் தங்கிய கழிவுகளை வெளியேற்றுவதைத்தான் நாம் நோய் என பெயரிட்டு அழைக்கிறோம் எனவும், உடலில் கழிவுகள் தேங்குவதற்கு காரணமும் நாம் தான் என்பதை பார்ததோம், அப்படியானால் கிருமிகளால் நோய் பரவுகிறது என்று தொலைக்காட்சி,வானொலி, செய்தித்தாள் என அனைத்திலும் விளம்பரம் செய்யப்படுகிறதே அதெல்லாம் பொய்யா என்ன?-என உங்களில் பலருக்கும் கேள்வி எழுந்திருக்கலாம், எனவே கிருமிகளை பற்றி இந்திய அக்குபங்சர் என்ன சொல்கிறது என பார்த்துவிட்டு பஞ்சபூத தத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

*கிருமிகள்(நுண்ணுயிரிகள்)*

கோழி மிதித்து குஞ்சு செத்துவிட்டது என்று சொன்னால் ஏற்க மறுக்கும் நாம், குஞ்சு மிதித்து கோழி செத்துவிட்டது என்று யாரோ ஒருவர் சொல்வதை நம்பிக் கொண்டிருக்கும் அவலநிலையில் இருக்கிறோம். உண்மையில் கிருமிகளால் தான் நோய்கள் பெருகிவிட்டதா? கிருமிகள் நமது எதிரிகளா?

தொலைக்காட்சி விளம்பரங்களில் இவ்வாறு சித்தரிக்ககின்றன. ஒரு மனிதன் காலை எழுந்து பல்துலக்குவதில் இருந்து ஆரம்பம் ஆகிறதாம் கிருமிகளுக்கு எதிரான போர், பல்லில் கிருமிகள்,பாத்ரூமில் கிருமிகள், கையில் கிருமிகள், உடலில் கிருமிகள், உணவு தட்டில் கிருமிகள், உணவில் கிருமிகள், பேருந்தில் கிருமிகள், பேசினால் கிருமிகள், விளையாடினால் கிருமிகள், வியர்தால் கிருமிகள், கொசுவினால் கிருமிகள், எலியினால் கிருமிகள், பன்றிகளால் கிருமிகள், பறவையினால் கிருமிகள் ...., கிருமிகள்,கிருமிகள்,கிருமிகள்..... அப்பப்பா சொல்லி முடிக்க முடியாத அளவிற்கு கண்ணை கட்டும் எவ்வளவு கிருமிகள்! திடீரேன எங்கிருந்து வந்தன இவ்வளவு கிருமிகள்? கோடானகோடி ஆண்டுகள் ஆன இந்த பூமியில் கிருமிகள் என்ன புது வரவா?

இந்த பூமியில் முதலில் தோன்றிய உயிரினம் ஒரு செல் உயிரிகளான அமீபா,வைரஸ்,பாக்டிரியா போன்ற நுண்ணுயிரிகள்-கிருமிகள் தான், அதிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று பலசெல் உயிரான மனிதன் உருவானதாக நவீனஅறிவியல் கூறுகிறது. உருவத்திலும்,ஆற்றலிலும் தன்னை விட பெரிய மனித உடலுக்குள் அவைகள் நுழைந்து நோய்களை உண்டாக்குவதாக கதை கட்டுகிறதே நவீன மருத்துவமும்,அதன் கைப்பிள்ளைகளான வியாபார நிறுவனங்களும் எது உண்மை?

கிருமிகள் இருப்பது உண்மைதான் ஆனால் அவைகள் நவீன அறிவியல் சித்தரிக்கும்படி கொலைகார கிருமிகள் அல்ல, அவையும் இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிர்தான்,இப்பிரபஞ்சத்தில் ஓர்உயிர்கான உணவு இருந்தால் மட்டுமே அவ்வுயிர் அந்த இடத்தில் படைக்கப்படும், வறண்ட பாலைவனத்தில் மான்கள் உயிர் வாழ முடியுமா? அடர்ந்த காடுகளில் ஒட்டகத்தை கண்டதுண்டா? பனிக்கரடிகள் சமவெளியில் வாழ்வதுண்டா? என்றால் இதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்பில்லை என்போம். ஏனேன்றால் அந்தந்த உயிர்கான உணவும்,சூழலும் எங்கு உள்ளதோ அங்குதான் அவை படைக்கப்படும்.கிருமிகளும் ஒரு உயிர்தானே அவை எங்கு படைக்கப்படும்(வாழும்,தோன்றும்)?அதற்கான உணவு எங்குள்ளதோ அங்குதானே!

சரி! நம் வீட்டில் எங்கோ ஓரிடத்தில் ஒரு எலி செத்துவிட்டது நாம் அதை கவனிக்கவில்லை, 2மாதம் வெளியூர் பயணம் சென்றுவிட்டோம், முதலில் பயனற்ற கழிவான அந்த இறந்த எலி தானே அழுகி தூர்நாற்றம் மூலம் காற்றில் கரைகிறது,ஓரிரு நாளில் அதில் கிருமிகள்(புழு) உருவாகி அதை தின்ன ஆரம்பிக்கிறது. கழிவு தின்று முடித்த அந்த கிருமிகள் உணவில்லாமல் தங்களுக்குள் ஒன்றை ஒன்று தின்று மடிந்து போகிறது.இறுதியில் கழிவும் காணமல் போகிறது. வீட்டில் செத்த எலியை முதலிலே நாம் அறிந்திருந்தால் அதை வீட்டைவிட்டு அகற்றி வீட்டை தூர்நாற்றத்தில் இருந்து காப்பாற்றியிருப்போம், 2 மாதம் கழித்து வந்து பார்க்கும்போது நமக்கு சிறிய வாடையும், மிகச்சிறிய அளவில் கழிவும் இருக்கும், ஒருவேளை இடைப்பட்ட நாளில் வந்து நாம் அதை பார்த்திருந்தால் என்ன செய்வோம்? கிருமிகள் மொய்த்து அழுகி கொண்டிருக்கும் அந்த கழிவை முழுவதும் வீட்டைவிட்டு அகற்றுவோமா? அல்லது வீட்டிற்குள்ளேயே வைத்து தூர்நாற்றம் தெரியாமல் இருக்கவும்,கிருமிகளை கொல்வதற்கும் அதன் மீது உயிர்கொல்லி(Anti biotic) மருந்துகளை தெளிப்போமா? இதற்கான பதிலை உங்களுக்குள் நீங்கள் சொல்லிக்கொண்டு அடுத்து பத்தியை வாசியுங்கள்.

இதைப்போலவே நாம் செய்த இயற்கை விதிமீறலால் (பசி, தாகம்,தூக்கம், ஓய்வு-ற்கு மதிப்பளிக்காமல்) வீடு எனும் உடலில் எங்கோ ஓரிடத்தில் கழிவு உருவாகிறது, அதை உடனே வெளியேற்ற நினைக்கிறது நம் உடல், அப்படி வெளியேறும் கழிவு உடலில் சில தொந்தரவுகளை ஏற்படுத்துகிறது. கழிவுகளின் தேக்கம்தான் நோய் என்று நாம் ஏற்கனவே அறிந்துள்ளோம். அவ்வாறு தங்கிய கழிவை உடல் வெளியேற்ற முயற்சிப்பதை நாம் ரசாயன மருந்துகளை கொண்டு தடைசெய்யும்போது அந்த கழிவு உடலை விட்டு வெளியேற இயலாமல் உடலின் ஒரு பகுதியில் கொடிய ரசாயன கழிவாக தங்குகிறது. இப்போதுதான் நவீன மருத்துவம் பெயர் வைத்திருக்கும் கொடியநோய்க்கிருமிகள் அந்த கழிவை அழிக்க அங்கு உருவாகின்றன. எந்த நோய்கிருமிக்கான கழிவு எவர் உடலில் உள்ளதோ அவர்களுக்கு அந்த நோய் என நவீன மருத்துவத்தால் பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது. வாழ்நாள் முழுதும் நோயை குணபடுத்த இயலாமல் நோய்க்கு பார்த்த மருத்துவத்தினால் மரணிக்கின்றனர் மனிதர்கள்.

உண்மையில் கிருமிகளால் நோய்கள் பரவுகிறது என்றால் பலகோடி செலவில் அணுஆயுதங்களை கொண்டு ஒரு நபரை,நாட்டை அழிப்பதை விட சொற்ப செலவில் கிருமிகளை பரவச்செய்து அழித்து விடலாமே! அது சினிமாவில் மட்டுமே சாத்தியம்,நிஜத்தில் சாத்தியமில்லை! கிருமிகளால் நோய்கள் வருவதில்லை என்பதை பல்வேறு அறிவியலாளர்கள் அதை நேரடியாக உட்கொண்டும்,உடலில் செலுத்திக்கொண்டும் நிரூபித்துள்ளனர்.

Source : ACU healer Mr Suresh. Padappai.